Latest News

November 20, 2014

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பம்
by admin - 0

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலர் விலக தயராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

28 முதல் 28 அமைச்சர்கள் அரசாங்கத்தில் வெளியேற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை அரசாங்கத்துடன் இணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 

எனினும் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முயற்சித்து வருவது உறுதியாகியுள்ளது.  

இவர்களில் சிரேஷ்ட அமைச்சர்கள் மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் அடங்குவதாக தெரியவருகிறது. 

அடுத்த சில தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தாங்கி கொள்ள முடியாத பல சம்பவங்கள் நடக்கும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


இதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொண்டார்

இன்று மாலை அவர் இந்த அறிவித்தலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டார்

ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் விரைவில் அரசாங்கத்தின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளுந்தரப்பில் இருந்து ஐ.தே.கவுக்குத் தாவிய வசந்த சேனநாயக்காவைத் தொடர்ந்து, ஆளுந்தரப்பில் இருந்து பல முக்கியஸ்தர்கள் ஐ.தே.கவுடன் இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் பச்சைநிற மாலைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சிமாறும் உறுப்பினர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

« PREV
NEXT »

No comments