தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் நெடுங்காலம் தூங்காது நேற்று
சிறிலங்கா நடளுமன்றத்தில் தலைவரின் இருப்பு உறுதி செய்யப்பட்டது.
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள யோசனையானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை கூட பறித்து கொள்ளும் யோசனைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கும் போதே தலைவர் பற்றிய உண்மையையும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள 19வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை பறிக்கும் யோசனை.
உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்து பார்த்து கொண்டிருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனே இதன் மூலம் மகிழ்ச்சியடைவார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டு பிரபாகரனின் இருப்பை நாடளுமன்றதில் உறுதிப்படுத்தினார்.
No comments
Post a Comment