Latest News

November 13, 2014

தமிழின அழிப்பு ஈழத்திலிருந்து தமிழகத்துக்கும்
by admin - 0

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று முன்பு வர்ணிக்கப்பட்டது. மிகையான அழகும் வளமும் பொருந்திய  இத்தீவு ஶ்ரீலங்கா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளை கொண்டது. இதில் தமிழீழம் வளம் மிகுந்த பெரிய கடற்பரப்பையும் நிலவளங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்ட நாடாகும். தமிழ் தேசமெங்கும் சிங்கள இனவெறியர்களின் பயங்கரவாத கால்கள் ஊன்றியுள்ளன. தமிழ் மக்கள் ஒரு பெரும் திறந்த வெளிச்சிறைச்சாலையில் அதாவது உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான சிறையில் அடைபட்டுள்ளார்கள். இந்த மக்களின் விடிவுக்காக உலகில் வாழும் தமிழர்கள் யாவரும் மாபெரும் போராட்டங்களை செய்துவருகின்றார்கள்.

இதில் தமிழ்நாட்டு சொந்தங்களின் தியாகங்கள் அளப்பெரியது. தமிழ் மக்களின் இவ்வாறான ஶ்ரீலங்கா எதிர்ப்பு  நடவடிக்கைகள் சிங்களம் உலக அரங்கில் பல அசௌகரியங்களையும் தோல்விகளையும் அடையக் காரணமானதால் இப்படியான போராட்டங்களை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயல்கின்றது இதன் ஓர் அங்கமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பயங்கரவாதிகள் என தடை செய்தது அதில் தனிப்பட்ட நபர்களையும் தடை செய்து தனது இயலாத தன்மையை வெளிப்படுத்தியது.

அடுத்தது தமிழ்நாட்டு தமிழர்களை அவர்களின் போராட்டத்தையும் மங்க செய்ய பல பிரயத்தன்ம் செய்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் சிங்களம் அவர்களின் போராட்டங்களை அடக்க செய்யும் முயற்சிகள் பலனற்றவையாகவே இருந்து வருகின்றன. தமிழக மக்களின் பின்னி பிணைந்த  சினிமா போன்ற துறைகளில் மூக்கை நுளைத்து சில தலைமைகளை பணம் கொடுத்து வாங்க முற்பட்டது முற்படுகிறது  இது தமிழக மக்களின் பலத்த எதிர்ப்புக்கள் மத்தியிலும் அவர்களின் இனப்பற்றின் பலத்தினாலும் அனைத்து சிங்கள பாய்ச்சல்களும் பலனற்று  போயின இனியும் போகும். இதனால் தமிழக மக்களை பழிவாங்க தமிழக மீனவர்களை கடற்பரப்பில் வைத்து சுடுவதும் தாக்குவதுமாக தனது இனவழிப்பை தமிழீழத்தில் இருந்து தமிழகத்துக்கு பரவவிட்டுள்ளது. இதன் ஒரு வடிவமே தமிழர்களை அழிக்க சிங்களம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறையை கையில் எடுத்து புதிய வடிவில் தனது  இனவழிப்பை மேற்கொள்வது. இதில்  மீனவர்கள் பழியாகிறார்கள் பழியாக்கப்படுகிறார்கள். 2011 நவம்பர் மாதத்தில் இலங்கை அரசு போதை கடத்தல் தொடர்பாக கைது செய்தவர்களில் 25 பேர் பாகிஸ்தானியர், 4 இந்தியர், ஆறு மாலைதீவினர், ஐந்து ஈரானியர் என்று இலங்கை அரசு சொல்லியது. ஆனால் தற்பொழுது ஐந்து மீனவர்களை தூக்கு தண்டனைக்கு அனுப்புவதாக சொல்லி இருக்கிறது. 

ஶ்ரீலங்கா மேற்காசியாவில் இருந்து கிழக்காசியாவிற்காகவும் போதை கடத்தலின் போக்குவரத்து புள்ளியாக இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்குமான புள்ளி என்கிறார்கள். 

மேலும் இக்கடத்தலில் அதிக அளவிற்கு ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானியர்கள். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாதிரியான தண்டனை கொடுக்கப்பட்டவில்லை இதற்கு முன்னதாக 2010இல் 55கிலோ ஹெராயின் போதை பொருள் , 3.5கிலோ கோரொய்ன் கடத்தியதாக 58 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கான விவரங்கள் கூட தெரிவிக்கவில்லை ஆனால் தமிழர்கள் விடயத்தில் இவர்களின் தீர்ப்பு சிங்கள தேசத்தின் தமிழ் இன அழிப்பு எங்கெல்லாம் பரவுகிறது என்பது தெளிவாகிறது.தமிழக தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு இந்திய நடுவன் அரசின் இயலாத தன்மையை மற்றும் இந்தியாவின் தமிழின அழிப்பு உடந்தயை எடுத்து காட்டுவதாக அமைகிறது.இந்த மீனவர்களின் விடுதலைக்கு உலகில் வாழும் தமிழ் மக்கள் கண்டன குரல் எழுப்ப  வேண்டும் அப்போதுதான் ஶ்ரீலங்காவின் அட்டுழியத்துக்கு முடிவு கட்டமுடியும் 
சரவணை மைந்தன்
« PREV
NEXT »