Latest News

October 13, 2014

பாஜகவில் விஜய்: அடுத்த முதலமைச்சர் விஜய்?
by admin - 0

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. திமுக ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு எதிராக வீடியோவை தயாரித்து வருகின்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இதே ஆசை இருக்கின்றது.
விஜய்காந்த் தலைமையில் பாஜக போட்டியிட விரும்பவில்லை. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க விரும்புகின்றது. எனவே தான் ரஜினியை மையமாக வைத்து இதுநாள் வரை காயை நகர்த்தி வந்தது. ஆனால் ரஜினி இதுவரை எவ்வித பிடியும் கொடுக்காமல் பேசி வருவதால், பாஜவின் பார்வை தற்போது விஜய் பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளார் விஜய். கத்தி படத்திற்கான எதிர்ப்பு இன்னும் தமிழகத்தில் நீடித்து வருகின்றது. இதனால் அரசியலில் குதிக்க தகுந்த நேரத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில் தற்போது காலம் கனிந்து அரசியலில் குதிக்க சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவருடைய வட்டாரங்கள் அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றன.
1991ஆம் ஆண்டு ரஜினிக்கு வந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட்டதுபோல், விஜய் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று விஜய்க்கு அவருடைய நண்பர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். விஜய்க்கும் அரசியலில் குதிக்க ஆசையிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்க பாஜக அறிவிக்க தயார் என்றால் அரசியலில் குதிக்க விஜய் தயார் என்று அவருடைய தரப்பில் இருந்து பாஜக மேலிடத்திற்கு செய்தி அனுப்ப தயாராகி வருகின்றனர். கத்தி திரைப்படம் ரிலீசானவுடன் விஜய் டெல்லி சென்று இதுகுறித்து பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவை வெளியில் இருந்து விஜய்யால் எதிர்க்க முடியாது. நேரடியாக அரசியலில் குதிப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதற்காகவே விஜய் பாஜகவுடன் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவியுள்ளது.
தமிழக மாணவர் அமைப்பு மற்றும் 60வதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி இன்று கத்தி படத்திற்கு எதிரான நடவடிக்கைகளை விவாதிக்க உள்ளனர். இந்நிலையில் விஜய் அரசியலில் குத்திக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

« PREV
NEXT »