வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா, பம்பைமடு கிராம அலுவலருக்கும் கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பான செய்தியை வெளியிட்டமை தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான கி.வசந்தரூபன் அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பாகவே தனது உயிர்ப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று அவர் ஏனை இரு ஊடகவியலாளர்கள் சகிதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment