இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான அழுத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்று கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வு அமர்வுகளுக்கு முன்னதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிவில் அமைப்புக்களும் தனியாக கூடிய நாட்டின் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.
மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாவலர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற விவகாரங்களில் மனித உரிமைப்பேரவை நெகிழ்வுப் போக்கைப் பின்பற்றாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டியின் பொறுப்பாளர் சேர் நைஜல் ரொட்லீ தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த எட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்றைய அமர்வுகளில் வாய்மொழி மூல அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.
பலவந்தமான கடத்தல்கள், சித்திரவதைகள், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் காணிப்பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கடந்த 2003ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டியில் முதல் தடவையாக மீளாய்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment