Latest News

October 12, 2014

கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல்! இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த ஆதாரம்!- பிரித்தானியா
by admin - 0

பிரித்தானிய இலங்கைக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸ், சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விவகாரமாக மாறியுள்ளது.  இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதற்கு இந்த தாக்குதல் சிறந்த ஆதாரம் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலைத்தீவும் இந்தியாவும் இந்த விடயத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. 

நியூயோர்க்கில் வைத்து கிறிஸ் நோனிஸை தாக்கப்பட்டதன் பின்னர், அவர் பிரித்தானியாவுக்கு திரும்பி தமது ராஜீனாமா கடிதத்தை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார். 

எனினும் அது ஏற்றுக்கொள்ளப்படாத காலத்தில் லண்டனில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியின் மாநாடு ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது கிறிஸ் நோனிஸை சந்தித்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பிலிப் ஹாமன்ட், இலங்கைக்கு எதிராக பிரித்தானியா மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பது எதற்காக என்பதை தற்போது நீங்கள் உணர்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் இதன்போது கருத்துரைக்கையில் இலங்கை ஆட்சியாளர்கள் தமது நாட்டுக்கும் தமக்கும் எதனையும் செய்வதற்கு முன்னர் இலங்கைக்கு எதையாவது செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலரும் தற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரஞ்சன் மாத்தாய்�� குறித்த தாக்குதல் விடயம் தற்போது பிரித்தானிய மட்டத்தில் சர்வதேச விடயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

இதேவேளை பெயர் குறிப்பிடமுடியாத ஒரு ராஜதந்திரி நோனிஸிடம் எலும்பு முறிவு ஏதும் ஏற்பட்டதா? என்ற வினவியுள்ளார்.

« PREV
NEXT »

No comments