வடக்கில் பதுங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஜெனீவாவிற்கு தகவல் வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அடிக்கடி வடக்கில் மறைந்துள்ள புலிகள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
போர் முடிந்து விட்டது புலிகள் இல்லை என சிலர் குறிப்பிடுகின்றனர்.
அப்படி என்றால் படையினருக்கு எதிராக அறிக்கைகளை அனுப்பி வைப்பது பேய்களா?
புலிகளின் பிரச்சாரப் பணிகளுடன் தொடர்புடைய பலர் வடக்கில் இருக்கின்றார்கள்.
சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருந்து தகவல்களை அனுப்பி வைக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் போன்றவற்றுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment