Latest News

October 10, 2014

மிகக் குறைந்த வயதில் நொபெல் பரிசு வென்றவர் மலாலா
by admin - 0

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா. அப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர். தலிபான்கள் ஒடுக்குமுறை குறித்து பிபிசியின் உருது மொழி இணையதளம் ஊடக பரப்புரை மேற்கொண்டு வந்தார்.

பின்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் மலாலா. இதனால் தலிபான் தீவிரவாதிகள் 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல முயன்றனர். தலிபான்களில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்தார் மலாலா. அதன் பின்னர் தொடர்ந்தும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

மலாலாவின் பிறந்த நாளை ஐ.நா. "மலாலா தினம்" என்று கடைபிடிக்க கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது அமைதி, உலக அமைதி அறக்கட்டளையின் "தைரியத்துக்கான விருது" ஆகியவற்றை பெற்ற சிறுமி மலாலாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments