சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிணை கோரி இந்திய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடை கோரியும், பிணை அளிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று(வியாழனன்று)மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா ஒரு பெண்மணி என்றும், அவரது வயதையும் அவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது ஜெயலலிதா முதல்வராக இருந்தக் காலப்பகுதியில் , வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த பதிவியை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment