Latest News

October 09, 2014

ISIS-யை மிரளவைத்த பெண் போராளி: 33 தீவிரவாதிகள் பலி
by admin - 0

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக பெண் போராளி ஒருவர் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 33 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தனி இஸ்லாமிய தேசத்தை பிரகாடனம் செய்து தொடர்ந்து அட்டூழியங்களை நிகழ்த்தி வருகிறது.

குறிப்பாக மேற்கு சிரியாவில் வசிக்கும் குர்திஷ் இன மக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர்களை ஒழிக்கும் நோக்கில் அங்கு உள்ள 350 கிராமங்களை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு சிரியாவில் உள்ள கோபேன் (Koban) நகரத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக குர்திஷ் படையினர் தாக்குதலை நடத்தியபோது, (Arin Mirkin) அரின் மிர்கின் என்ற பெண் போராளியை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.

அப்போது திடீரென அந்த பெண் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.இதில் 33 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

இப்பெண் இச்செயல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு 19 வயது குர்திஷ் இனப் பெண் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தன்னை சுற்றிவளைத்ததை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments