Latest News

October 08, 2014

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜ் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் படுகாயம்
by admin - 0

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தேவராஜ் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்திருக்கின்றார்.

இன்று இரவு வவுனியாவிலிருந்து நெடுங்கேணி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் நால்வர் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்வதற்கான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நெடுங்கேணியில் உள்ள அவருடைய அலுவத்தினுள் புகுந்த அடையாளம் தெரியாதோர் அவருடைய அலுவலகத்தினை அடித்துச் சேதப்படுத்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments