தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனின் 17வது பிறந்த நாள் இன்றைய தினம் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.
ஆனாலும் குறித்த ஆவணப்படத்தை இலங்கை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Social Buttons