Latest News

September 23, 2014

அனைத்துக் கண்களும் செவ்வாயை நோக்கி... நாளை காலை சுற்றுப் பாதையில் நுழைகிறது மங்கள்யான்!
by admin - 0

அத்தனை இந்தியர்களுக்கும் நாளை பெருமிதம் தரக் கூடிய நாள். புதுப் பெருமை சேரப் போகும் நாள். இந்தியாவின் "பட்ஜெட்" செவ்வாய் விண்கலமான மங்கள்யான், நாளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நுழையப் போகிறது.
இதை ஒரு வரியில் எளிதாக சொல்லி விட்டோம். ஆனால் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைவது மிகப் பெரிய காரியம், எளிதான ஒன்று அல்ல. ஆனால் அந்த சோதனையில் மங்கள்யான் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய விஞ்ஞானிகள் உள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து நிலை கொள்ளும்போது பல புதிய சாதனகளையும் அது படைக்கும்.

நேற்று டி 20 வெற்றி

நேற்று மங்கள்யானில் உள்ள பெரிய ராக்கெட் மோட்டாரை 4 விநாடி நேரத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கிப் பரிசோதித்துப் பார்த்தனர். இதை டுவென்டி 20 போட்டியின் வெற்றியோடு ஒப்பிடலாம். 
« PREV
NEXT »