ஆந்திர மாநிலம் ஹைதரபாத் லும்பினி பார்க் பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பவானி என்ற 6 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவ ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் கடும் போக்குவரத்து நெரிசலினால் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர தாமதமாகி கொண்டிருந்ததது.
இதனை கண்ட ஜிஒய்ஹச்ஏ என்ற தன்னார்வ தொண்டு இயக்கத்தை சேர்ந்த இர்பான் மேலும் சில இளைஞர்களோடு சிறுமியை கையில் தூக்கி கொண்டு ஓடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அனுமதித்தார்.உடனடியாக மருத்துவர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்து சிறுமியை காப்பற்றினர்.
No comments
Post a Comment