மெரிக்கா அரசாங்கம் மற்றும் அதன் ஜனாதிபதி பராக் ஒபாமாவை நெருங்கிச் செல்வது போன்ற காரணங்களை முன்வைத்து இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் விசாரணையை நடத்த அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கடந்த சில வாரங்களாக செய்திகளை வெளியிட்டு வந்தது.
இதன்படி இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் 600 மில்லியன் டொலர்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய அதிகாரியும் பாகிஸ்தானிய வம்சாவளியுமான இமாட் சுப்ரி என்பவரே தொடர்பாளராக செயற்பட்டுள்ளார்.
அவரின் ஆலோசனையின்படி இலங்கை, அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் ஆலோசனைகளை பெற்று இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் இதன்போது சஜின் வாஸ் குணவர்த்தன குறித்த உடன்படிக்கைகளை செய்யும் போது வழங்கிய இலங்கையின் முகவரி பொய்யான முகவரி என்று தெரியவந்துள்ளது.
ஒன்பதின் கீழ் இரண்டு டட்லி சேனாநாயக்க வீதி கொழும்பு 8. என்ற முகவரியை வழங்கியே சஜின் வாஸ் குணவர்த்தன குறித்த உடன்படிக்கைகளை செய்துள்ளார்.
குறித்த முகவரியில் தற்போது கொரியன் இன்டர்நெசனல் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது இந்த நிறுவனம் குறித்த இடத்தில் அமைக்கப்படுவதற்கு முன்னர் அந்த கட்டிடத்தில் சஜின்வாஸ் குணவர்த்தனவின் நண்பரின் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்று இயங்கிவந்தது.
இந்தநிலையில் அண்மைகாலம் வரையில் சஜின்வாஸ் குணவர்த்தன குறித்த முகவரியை அமெரிக்க பொதுமக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு வழங்கி உடன்படிக்கையை செய்துள்ளமை அமெரிக்க வெளியுறவு நிறுவன சட்டத்துக்கு அமைய குற்றமாகும்.
அவ்வாறான குற்றங்களுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.
இந்தநிலையில் குறித்த தகவல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Social Buttons