Latest News

August 29, 2014

லண்டனையும் ISIS குறி வைக்கிறது
by admin - 0

ஈராக்கில் அரசுடன் சண்டை இட்டுகொண்டு சிரியாவில் தாக்குதல் நாடத்தி வெற்றி பெற்று வரும் பயங்கர தீவிரவாத அமைப்பான ISIS அமைப்பானது தற்போது லண்டனயும் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

முன்னரே இவர்கள், நடவடிக்கை தொடர்பாக நாம் அறிந்து இருந்தோம். ஆனால் நாம் நினைத்து பார்க முடியாத அளவு அவர்கள் பெருகிவிட்டார்கள், என்று கூறியுள்ளார் டேவிட் கமருன்.

பிரித்தானியாவின் உளவுப் பிரிவான MI6 தற்போது கடும் எச்சரிக்கை அடுத்தே கமருன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது பலமாக நிலைகொண்டுள்ள ISIS தீவிரவாதிகள், லண்டனை குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளார்கள் என்பது தான் அந்த எச்சரிக்கை ஆகும். இதன் அடிப்படையில் தான் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் இந்த அறிவித்தலை எச்சரிக்கையாக விடுத்துள்ளார்.


திறமை வாய்ந்த இங்கிலாந்து காவல்துறை எப்படியும் இதை தடுத்துவிடும் இனிவரும் காலங்களில் இங்கிலாந்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்  கைது செய்யப்படுவார்கள் அதன் பின் அச்சம் நீங்கிவிடும் .
« PREV
NEXT »

No comments