இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் சாட்சியம் அளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திடமும் ஐ.நா. மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளிடமும் இவ்வாறு கேட்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை பேரவையால் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணைகளில் தகவல் கொடுக்கக்கூடியவர்களுக்கு எதிரான மிரட்டல்கள், பயமுறுத்தல்கள், பழிவாங்கல்கள் பற்றி அறியாது நாம் அச்சம் கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் 'பவுடெலெயர் என்டொங் எல்லா'வுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
ஐ.நாவுடன் ஒத்துழைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கைளிலிருந்து மனித உரிமை பாதுகாவலர்களையும் வேறு தனிப்பட்டவர்களையும பாதுகாக்க தேவையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மனித உரிமையிடமும் கேட்டுள்ளன.
No comments
Post a Comment