Latest News

August 15, 2014

அரசாங்கத்தின் ஏமாற்று நாடகத்தின் மற்றுமொரு கண்துடைப்பு அத்தியாயமே நிபுணர்குழு நியமனம் - மங்­கள சம­ர­வீர
by Unknown - 0

சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவை எதிர்த்­த வர்கள், நிபுணர் குழுவை அமைத்­தி­ருப்­பது யுத்தக் குற்­றங்­க­ளையும் அதற்கு துணை போ­ன­வர்­க­ளையும் காப்­பாற்­று­வதற்­கா­க­வே ­யாகும்.

அர­சினால் மேற்­கொள்­ளப்­படும் ஏமாற்று நாட­கத்தின் மற்­று­மொரு கண்­து­டைப்பு அத்­தி­யா­யமே இந்­நி­ய­ம­ன­மாகும் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­ய­மான ஸ்ரீகொத்தாவில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மங்­கள சம­ர­வீர எம்.பி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
எமது கட்­சி­யினால் சர்­வ­தேச விசா­ரணை ஒன்று தேவை­யென மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்­தப்­பட்டும் இது தொடர்பில் அரசு பொருட்­ப­டுத்­தாமல் எமது பிரச்­சி­னை­களை நாமே தீர்த்துக்கொள்வோம். ஐ.நா விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்குள் வரக்­கூ­டாது என்ற அர­சாங்கம் ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழுவை நாட்­டிற்குள் அனு­ம­திக்­கக்­கூ­டாது என்ற பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டுவந்து நிறை­வேற்­றி­யது. ஆனால் இன்று காணாமல் போனோர் தொடர்பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு அமை க்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வதற்­காக சர்­வ­தேச நிபு­ணர்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செயல் எமது நாட்­டையும் பாரா­ளு­மன்றத்­தையும் இழி­வு­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ள­து.
உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச தலை­யீ­டுகள் தேவை­யற்­றது எனக் கூறி வந்த அர­சா­னது இவ்­வாறு நிபுணர் குழுவை அமைத்­தி­ருப்­பது யுத்த குற்­றங்கள் இடம்­பெற கார­ண­கர்த்­தா­வாக இருந்த முக்­கி­யஸ்­த­ர்­களை காப்­பாற்றி இறுதி யுத்தகால பகு­தி­களில் இடம்­பெற்ற யுத்தக் குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்­ப­ வற்றை இரா­ணு­வத்­தின் மீது சுமத்­து­வதன் மூலம் அரசின் கீழ் இருக்கும் முக்­கி­யஸ்­தர்­களை காப்­பாற்­றவே இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட அரசு முயற்­சிக்­கின்­றது.
ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்சி காலத் தில் எமது நாட்டின் இரா­ணு­வமே சிறந்­தது என உலக நாடு­களில் ஒப்புக் கொள்­ளப்­ப ட்டு உலக நாடு­களின் பிரச்­சி­னை­களின் போது அந்த நாட்டின் தேவை­க­ளுக்­காக எமது நாட்டின் இரா­ணுவம் வேண்­டுகோ ளின் பேரில் அனுப்பிவைக்­கப்­பட்டது. ஆனால் இன்­றைய நிலையில் இரா­ணு வம் உலக நாடு­களின் சாபங்­க­ளுக்கும்இ குற்றச்சாட்டு­க­ளுக்கும் ஆளாகி உள்­ளது. இதற்கு முழு பொறுப்­பையும் அரசு ஏற்க வேண்டும்.
நாட்டு மக்­களை ஏமாற்­று­வ­தற்கும் ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை குழப்­பி­ய­டிப்பதற்குமே இந்த நிபுணர் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. மாறாகஇ பாதிக்­கப்­பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் அரசுக்குக் கிடை யாது.
சர்வதேச விசாரணைகளையும் அழுத்த ங்களையும் எதிர்த்தவர்களே இன்று சர்வதேச நிபுணர் குழுவை அமைப்பதானது அவர் களின் போலி நாடகத்தையும் இரட்டை வேடத்தையும் உறுதிப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
« PREV
NEXT »