இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முதலாவது சுதந்திரதின உரையில் முக்கிய சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தையும் பால், சாதி மற்றும் மத ரீதியான வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் பற்றி பிரதமர் தனது உரையில் கூறியுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில், குறிப்புகள் எதுவும் இன்றி, குண்டு துளைக்காத கண்ணாடியின் முன் நிற்காமல், ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நரேந்திர மோடி உரையாற்றினார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வெட்கமடைவதாகவும் மோடி கூறினார்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானைத் தாக்குகின்ற விதத்தில் எந்தவிதமான குறிப்பான கருத்துக்களையும் மோடியின் உரை உள்ளடக்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சர்வதேச உற்பத்திகளுக்கான களமாக மாற்றுவதற்கு உலகம் உதவமுன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Social Buttons