குடிவரவு அமைச்சர் மொரிசனும் பிரதமர் டோனி ஹார்பட்டும் சேர்ந்து 157 புகலிடக் கோரிக்கையாளர்களை கடந்த சனிக்கிழமை நவ்ரு தடுப்பு காவலுக்கு அனுப்பி வைத்தமையை கண்டித்து இன்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
அகதிகள் அதிரடி கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் சிட்னியில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக இடம் பெற்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இயன் ரிண்டோல்,
அமைச்சர் மொரிசன் சிறுவர்களினது வாழ்க்கையில் அரசியல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்
இலங்கை தமிழர்களை மாத்திரம் குறி வைத்து நடத்தும் கடும்போக்கு சட்ட நடவடிக்கைகளை உடனடியாக கை விட வேண்டும் . நவ்ரு தடுப்பு காவலானது ஒரு சிறை கூடத்துக்கு சமமானது, சிறுவர்களது நிலைமை மிகவும் மோசமடையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது .
இங்கு இருக்கின்ற புகலிடக் கோரிக்கையாலர்களுக்கு நல்ல ஒரு முடிவினை அமைசர் மொரிசன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பட்டம் நடக்கும் அதே நேரத்தில் கெர்ட்டின் தடுப்பு காவலிலும் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
Social Buttons