இலங்கையில் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினாலேயே இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரச சார்பற்ற நிலையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ள செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் தமது முயற்சிகள் அரசுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியலைத் தயாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணி, வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் நடைபெறும் என்று தெரியவருகின்றது.
Social Buttons