Latest News

August 10, 2014

நிசா பிஸ்வால் ஐ.நா விசாரணைக் குழுவை சந்திக்க உள்ளார்!
by Unknown - 0

தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பிரதிநிதிகளுக்கும் பிஸ்வாலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறவுள்ளதாக ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பிலான விசாரணைகளை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு கடந்த வாரம் லண்டனில் கூடி ஆராய்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் , அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இந்தக் குழு இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளது. 
விசாரணைகளின் போக்கு இலங்கையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிஸ்வாலுக்கும் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கும் இடையில் எங்கு சந்திப்பு நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
« PREV
NEXT »