Latest News

August 11, 2014

கொழும்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் தீவிரம்!
by Unknown - 0

அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திக்அகொள்ள இலங்கை பெரும் நிதியில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் மீண்டும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.

காணாமல் போனோரின் உறவுகளை கொண்டு கொழும்பில் நடத்திய கூட்டத்தின்போது அமெரிக்க அதிகாரிகளும் பங்கேற்ற பின்னரே இந்த நிலை உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் தமது அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட்ட ஏனைய நாட்டு இராஜதந்திரிகளை அழைத்த அமைச்சர் ஜி எல் பீரிஸ், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தநிலையிலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »