Latest News

August 12, 2014

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம்!
by Unknown - 0

அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இது தற்கொலை எனத் தெரிவதாக கலிஃபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நண்பகலில் வந்த அவசர அழைப்பை அடுத்து, அதிகாரிகள் அங்கே சென்றபோது, அவர் இறந்திருந்ததாக மாரின் கவுண்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
குட் மார்னிங் வியட்னாம்', 'டெட் பொயட்ஸ் சொசைட்டி' ஆகிய படங்களில் நடித்திருக்கும் ராபின் வில்லியம்ஸ் 'குட் வில் ஹண்டிங்' படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றவர்.
அவர் தீவிர மன அழுத்த நோயுடன் போராடிவந்ததாக அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முந்தைய காலகட்டங்களில் தன்னுடைய மதுப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஆகியவற்றுடனான தன் போராட்டத்தைப் பற்றி அவர் பேசியுள்ளார். இந்தப் பழக்கங்களிலிருந்து மீண்டிருந்த வில்லியம்ஸ் சமீபத்தில், மீண்டும் மீட்பு மையத்திற்கு சென்றுவந்தார்.
மூச்சு தடைபட்டதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், முழுமையான விசாரணைக்குப் பிறகே இறுதி முடிவுக்கு வர முடியும் என காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
வில்லியம்ஸின் முந்தைய திருமணங்களின் மூலம் அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். 1951ல் சிகாகோவில் பிறந்த வில்லியம்ஸ் பள்ளிக்கூடத்தில் நாடக கிளப்பில் சேர்ந்தார். பிறகு, அமெரிக்காவின் புகழ்பெற்ற நுண் கலைக் கல்லூரியான நியூயார்க்கில் இருக்கும் ஜுலியார்டில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
அங்குதான் நகைச்சுவையை தேர்ந்தெடுக்கும்படி ஆசிரியர் ஒருவர் அவருக்கு ஊக்கமளித்தார். தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருந்தாலும் குட்மார்னிங் வியட்னாம், டெட் பொயட்ஸ் சொசைட்டி, மிஸஸ் டவுட்ஃபயர் போன்ற படங்களிலும் அவர் நடித்தார்.
அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும் 'குட் வில் ஹண்டிங்' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது 1998ல் கிடைத்தது. 
« PREV
NEXT »