இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா.விசாரணை குழுவிடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
21.02.2002 முதல் 15.11.2011 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையாளர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகள் அனுப்பப்பட வேண்டும். முறைப்பாடுகளை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாயின்: OISL_submissions@ohchr.org என்ற முகவரிக்கும்
அஞ்சல் மூலம் அனுப்புவதாயின்
OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.
Social Buttons