கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல்களின்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பனையறுப்பான் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு மற்றும் மோதல்கள் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இதன்போது பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், பொலிஸார் பயணம் செய்த வாகனமும் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவந்தனர்.
இதன்படி குறித்த பிரதேசத்தினை சேர்ந்த இரு இளைஞர்களை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் இடத்துக்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கேட்டறிந்து கொண்டனர்.
Social Buttons