Latest News

August 14, 2014

ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை குழுவின் ஆயுட்காலம் நீட்டிப்பு-திடீரென இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
by admin - 0

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்ட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ள சதிகள் குறித்து விரிவாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலத்தை மேலும் ஓர் ஆண்டு  இந்திய மத்திய அரசு நீட்டித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி அம்சங்களை ஆராய சி.பி.ஐ.யின் பல்நோக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், உளவுத்துறை, ரா, வருவாய் உளவுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். 

இந்த குழுவின் ஆயுட்காலம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன்; முடிவடைந்ததுடன் ராஜீவ்காந்தி கொலை சதி பற்றிய விசாரணை குழுவுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதாக, பணிக்காலம் முடிந்த 2 மாதங்கள் கழித்து, திடீரென தற்போது இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.ராஜீவ் கொலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாதனின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருவதாக குழு வட்டாரங்கள் தெரிவித்ததுடன் இவர்தான் கொலைக்கான நிதியுதவி செய்தவர் என்றும் அக்குழு சந்தேகிக்கிறது. 

பத்மநாபன் நான்காண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில், கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »