ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இலங்கை ஒரு உறுதியான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமெரிக்காவின் 238 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சீசன் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் வளமான வாழ்க்கைக்கான சாதகமான தூரநோக்குடன் கூடிய விடயங்களை அமெரிக்கா இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா எப்பவும் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்த பிரச்சினைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது எனவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா இரண்டு பில்லியன் டொலர்களை அமெரிக்க உதவித் திட்டத்தின் ஊடாக வழங்கியுள்ளது.
அமெரிக்க உதவித் திட்டம் வாழ்வாதார திட்டங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் தனியார் துறையுடன் இணைந்து பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Social Buttons