Latest News

July 05, 2014

படையினரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் ஒருவரை பிரித்தானியா நாடுகடத்தவுள்ளது
by Unknown - 0

போரின் போது பாலியல் வல்லுறவு தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், மாநாடு ஒன்றை நடத்திய நிலையில் இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தவுள்ளது.

இந்த தகவலை சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்ற இந்த பெண், பிரித்தானியா செல்லும் முன்னர் இலங்கை சிறையில் வைத்து இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவர் சிறையில் இருந்த போது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சினால் திருப்பியனுப்பப்படவுள்ள இந்தப் பெண் குறித்து பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே பிரித்தானியாவில் நடைபெற்ற மாநாட்டின் போது கருத்துரைத்த பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், புகலிடம் கோரியோர் நாடு கடத்தப்படுபடுவதற்கு முன்னர் பிரித்தானியா உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்திருந்தார்.
இதற்கு மாறாக குறித்த பெண் நாடு கடத்தப்படுவாராக இருந்தால் அது வில்லியம் ஹேக் வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதாக அமையும் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
எனவே பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தில் உரிய முனைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இதற்கிடையில் குறித்த பெண் தற்போது தமது வாழ்க்கை பற்றி அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »