Latest News

July 16, 2014

குர்ஹாம் படுகொலை வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்-பிரித்தானியா
by Unknown - 0

பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ படுகொலை வழக்கு தொடர்பிலான தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து உலகம் விழிப்புடன் கண்காணித்துக் கொண்டிருப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி வழங்க உள்ள இந்த வழக்குத் தீர்ப்பு  இலங்கையில் மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படுகின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்ற ஓர் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று குர்ஹாம் செய்க் தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி கொல்லப்பட்டதுடன், அவரது ரஸ்ய காதலி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக், குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத அளவிற்கு வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. எனவே கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

« PREV
NEXT »