Latest News

July 20, 2014

ஸ்கைப், வீடியோ கொன்வரன்ஸ் மூலமாக ஐநா விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!
by Unknown - 0

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கொன்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஐ.நா.மனித உரிமைகள்  பேரவை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களின்படி, இலங்கையின் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்க வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இலங்கையின் மனித உரிமைகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
குறிப்பாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன.
காரணம் ஐ.நா. குழுவிடம் சாட்சியமளிப்பவர்கள் துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய நிலைமை இலங்கையில் உள்ளது. சாட்சியமளிப்போரைப் பாதுகாக்கும் விதத்திலான சட்ட அமைப்புகள் இலங்கையில் இல்லை.
எனவே இலங்கையில் வாழும் சாட்சியாளர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக்கில் அமையும் ஐ.நா. விசாரணைக் குழுவின் முகவர் இடங்களுக்கு தங்கள் சாட்சியங்களை அளிக்க முடியும் - என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் இலங்கையில் நடத்த அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என்பதுடன் அனுமதிக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »