Latest News

July 15, 2014

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
by Unknown - 0

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆனால் பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் என்ற பதவியில் அமைச்சரவையில் நீடிப்பார் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.
ஹேக் 2015 பொதுத்தேர்த்லில் மீண்டும் போட்டியிடமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் பிலிப் ஹேமண்ட் வெளியுறவுத்துறை அமைச்சராவார் என்று தெரியவருகிறது.
இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்து வந்த மூத்த அமைச்சர் கென் க்ளார்க்கும் பதவி விலகுகிறார்.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, இந்த அமைச்சரவை மாற்றங்கள் " மிதவாதிகளின் படுகொலை" என்று வர்ணித்திருக்கிறது.
அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரன், வில்லியம் ஹேக் "கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவராக ஒரு தலைமுறைக் காலம் நீடித்தவர்களில் ஒருவர், கட்சியிலும், அமைச்சரவையிலும் சேவை செய்தவர்" என்று பாராட்டியிருக்கிறார். வரும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் முழு வெற்றிக்கு உழைக்கப்போகும் குழுவில் அவரும் இடம் பெற்றிருப்பார் என்று கேமரன் கூறினார்.
« PREV
NEXT »