Latest News

July 18, 2014

குராம் ஷேக் கொலை- தங்காலை பிரதேசசபைத் தலைவர் உட்பட 4 பேருக்கு 20 வருட சிறைத் தண்டனை
by Unknown - 0

பிரித்தானிய பிரஜையை கொலை செய்த தங்காலை பிரதேச சபைத் தலைவருக்கு 20 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குராம் ஷேக் கொலை வழக்கு தொடா்பில் இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த சிறைத் தண்டனையை விதித்துள்ளது.
தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதாண பத்திரணவிற்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மேலும் நான்கு பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று தங்காலை ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து உபசாரமொன்றின் போது குராம் ஷேக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ஷேக்கின் ரஷ்ய காதலி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
இந்த கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச அளவில் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
ஆளும் கட்சியின் பிரதேச சபைத் தலைவரும், ஜனாதிபதிக்கும் நெருக்கமானவருமான தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதாண பத்திரணவிற்கு எதிராக எவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து, உலக நாடுகள் கவனம் செலுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் குராம் ஷேக் கொலை குற்றத்திற்காக சம்பத் மற்றும் மேலும் மூன்று பேருக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ரோஹினி வல்கமவினால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
« PREV
NEXT »