Latest News

June 16, 2014

பாரீஸ் லாச்சப்பலில் தமிழருக்கு நடந்த வாள் வெட்டு…
by admin - 0

பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது.

அவசர முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவமானது தமிழ் குழுக்களிடையேயான மோதலின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments