புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை.
இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதி இன்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்பில் சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது.
எனினும் பூதவுடலை வன்னிக்கு எடுத்துச் செல்ல பணமின்மையால் கடந்த சில நாட்களாக கொழும்பில் பிரேத அறையில் அச்சிறு குழந்தையினது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் பற்றி அறிந்த கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை தையற் தொழிற்சாலை பெண்பணியாளர்கள் இணைந்து திரட்டி வழங்கிய பணத்தை அடுத்து பூதவுடல் சொந்த இடத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது இன்றைய சூழலிற்கு தகும் காரணம் கடந்த காலங்களில் தமிழர்களின் போராட்டங்களை வலிமையாக்கியதில் பாரிய பங்களிப்புச் செய்த பல தளபதிகள் போராளிகள் வீதிகளில் பிச்சை எடுக்காத குறையாக திரியும் நிலை பற்றி யாரும் சிந்தித்ததுண்டா இல்லை காரணம் அவர்களிடம் இன்று எதுவும் இல்லை அது மட்டுமா அவர்களை இன்று மதிக்கும் பண்பும் அற்ற நாதியற்ற தமிழன்.
புலிகளின் போராட்டத்தில் பாரிய பங்களிப்புச் செய்த மகேந்தியின் குடும்பத்தைப் பற்றி யாரும் சிந்தித்ததுண்டா? இல்லை ஆனால் மகேந்தி இறந்த நினைவு நாளை மதிக்கும் இன்றும் அடுத்த போராட்டம் விரைவில்.. ஆரம்பம் எனும் வெளிநாட்டுப் புலிகள் எங்கே? இவர்கள் வருடத்திற்கு ஒரு மாவீரர் தினம் மற்றும் வருடத்தில் பல கலை நிகழ்வுகள் செய்பவர்கள் இதைப் பற்றி சிந்தித்த நாட்கள் உண்டா? இல்லை! இவர்களுக்கு மகேந்தியின் குடும்பத்தில் எத்தனை உறவுகள் எனத் தெரியுமோ தெரியாது? இன்னும் பல மகேந்தியின் குடும்பங்கள் வீதிகளில் இதைப்பற்றி வெளிநாட்டில் வாழும் ஒரு சிலர் நினைப்பதுண்டு! பலர் நினைப்பதில்லை காரணம் அவ்வாறான நிலைதான் இன்று உள்ளது.
நாட்டில் தமிழரின் தீர்வு விடயத்தில் அடிபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியும் எங்கே? முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாணசபை எங்கே? தன் இனத்தின் மரணத்திற்கு உதவ முடியாத நாதியற்ற தமிழ் தலைவர்கள் எல்லாம் தமிழர்களின் தலைவர்கள் இந்த அவலத்தை யாரிடம் முறையிடுவது….
இப்படி யாருமற்ற அனாதையான தமிழ் இனத்தை யார் காப்பாற்றுவான்? யாரிடம் செல்வது என புரியாமல் தமிழரின் கண்ணீரில் இரத்தம் கலக்கிறது துடைப்பதற்கு யார் வருவார்…..
Social Buttons