Latest News

May 08, 2014

யாழ். பல்கலைக் கழகத்தில் நாளை(9/5/2014) போராட்டம்
by admin - 0

யாழ். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை அமைதிப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டு இந்த அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் நேற்றுமுன்தினம் பல்கலைக்கழக சூழலில் வீசப்பட்டிருந்தன. கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன், மாணவர் ஒன்றியத் தலைவர் சுபாபர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கோமேஸ், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் வேணுகோபன் ஆகியோர் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தாங்கள் அமைதிப்போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என அறிவித்துள்ளனர். -
« PREV
NEXT »