Latest News

May 11, 2014

முள்ளிவைக்கால் முற்றுபெறும் ஒரு தீ அல்ல.
by admin - 0


முள்ளிவைக்கால் முற்றுபெறும் ஒரு தீ அல்ல.
விடுதலையின் பெரும் மூச்சு.
வீறுகொண்டு எழும் வீரம்.
கருவில் பிறபெடுக்கும் அக்குனி குஞ்சுகளின் கருப்பை !
வருவோம் விடுதலை பெறுவோம் என்று தணல் விடும் தேசம்.

விடுதலை மக்களின் வீர நிலம் அது சிவப்பு
முள்ளிவாய்காலின் கரையின் நிறம் நீலம் அல்ல
 முள்ளிவாய்க்கால் கடல் நீர் தமிழ் வீரர்களின்
குருதியால் சிவந்த நீர்  -மணல்
காற்று வீச்சு மாவீரர்களின் சுவாசம்

கடல் அலைகள் சொல்லி சொல்லி அடிக்கும் தமிழ்வீரம்
எதிரியின் நித்திரையை குழப்பிவிடும்.
தாயை பிரிந்த மகனின் குரல்
மகனை பிரிந்த தாயின் கதறல்
 இந்தி தேசத்துக்கு கேட்கவில்லை-ஆயினும்
எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு என்றும்
உரைக்கும் இந்தியாவின் துரோகம்.
அது கொடுக்கும் தக்க பதில்.
அதுவே தமிழர்களின் தீயின்
அணையா விடிவிளக்கு.

சரவணை மைந்தன்


« PREV
NEXT »