Latest News

May 20, 2014

வெள்ளைக்கொடி தொடர்பில் கிடைத்த புதிய சாட்சியம் - யஸ்மின் சூக்கா
by admin - 0

இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் புதிய சாட்சியம் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி தொடர்பான புதிய சாட்சியங்கள் சர்வதேச ரீதியான சுதந்திரமான விசாரணைகளை நடத்தவேண்டிய தேவைகளை ஏற்படுத்தியுள்ளது என்று சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சாட்சியத்தின்படி விடுதலைப்புலிகளின் பொலிஸ் தலைமையாளரையும் உயர் பொதுமகனையும் சரணடைய அனுமதிக்கப்போவதில்லை என்று அரசாங்கத்தின் உயர்பீடம் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச ரீதியாக பாரிய மனித உரிமை மீறல் என்று சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சரணடைதல் தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவின் குறுஞ்செய்தி மற்றும் நேரடியாக பார்த்த சாட்சியாளர்கள் நால்வர் உள்ளதாகவும் சூக்கா தெரிவித்துள்ளார்.

யஸ்மின் சூக்கா முன்னர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பேன் கீ மூனின் இலங்கை தொடர்பான குழுவின் முக்கிய ஆலோசனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »