யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நண்பகல் 11மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்குபற்றினர் கடந்தவாரம் மூடப்பட்ட யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களால் இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே பல்கலைக்கழகம் கடந்தவாரம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினர் சூழ்ந்திருக்க மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.
Social Buttons