யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கலைப் பீட மாணவர்கள் சிலர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 30 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. மோட்டர் சைக்கிள் தொடர்பான பிரச்சினை இந்த தாக்குதல் சம்பவவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
பதிவாளர் முன்னிலையில், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Buttons