Latest News

May 02, 2014

இலங்கையினில் நடப்பது இனப்படுகொலையே! சுமந்திரன் திட்டவட்டம்!!
by admin - 0

இலங்கையினில் நடக்கும் அரச செயற்பாடுகள் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலே.ஆனால் இதனை சர்வதேச விசாரணையுடன் தொடர்புபடுத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இலங்கைப்பாராளுமன்றத்தினிலேயே இங்கு நடப்பது இனப்படுகொலையே என்பதை நானும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிறேமச்சந்திரனுமே பேசியிருந்தோமென்பதை மறக்க கூடாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.


யாழ்.ஊடக அமையத்தினில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அரசு சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வர அனுமதி மறுத்தாலும் சர்வதேச ரீதியினில் விசாரணைகள் நடக்கும். ஏற்கனவே பல நாடுகள் தொடர்பினில் அவ்வாறு விசாரணைகள் நடக்கும். இலங்கை தொடர்பிலும் அவ்வாறே நடக்குமென நம்புகின்றேனெனவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையினில் கூட்டமைப்பு சாட்சியங்களை வழங்குமாவென எழுப்பப்பட்ட கேள்வபிக்கு பதிலளித்த அவர் அது பற்றி கூட்டமைப்பு கலந்துரையாடியிருப்பதாகவும் எனினும் அது பற்றி இப்போது விபரிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டமைப்பு ஜெனீவாவினில் இனப்படுகொலை பற்றி பிரஸ்தாபிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் பிரேரணையினில் இனப்படுகொலை பற்றி பிரஸ்தாபித்திருந்தால் நிரூபிக்க வேண்டும். இதற்கு நல்ல உதாரணமாக தென்சூடானை எடுத்துக்கொள்ளலாம்.அங்கு நடந்தது இனப்படுகொலையென பிரஸ்தாபிக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற போதும் அது நிறைவேற்றப்படவில்லை.அவ்வாறான அரசியல் ரீதியான தோல்வி எமக்கும் வந்தால் அதிலிருந்து மீண்டெழுவது கடினம் எனவும் தெரிவித்தார்.

திருகோணமலை கூட்டத்தினில் அனந்தியை தான் பேசவில்லையென மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் தான் உரையாற்றிய போது அங்கு அனந்தி இருந்திருக்கவில்லையெனவும் தெரிவித்ததுடன் இவ்விவாதம் நீண்டு செல்வதை விரும்பவில்லையெனவும் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »