எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வகுத்துக் கொண்ட அரசியல் தந்துரோபாய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இதன் மூலம் சிசறிலங்கா அரசாங்கத்தை பலவீனப் படுத்துவது எமது பிரச்சனைகளின் தாக்கத்தை சிங்கள மக்களை உணரவைப்பது, இவற்றினூடாக எமது தமிழர் தரப்பில் பேரம் பேசும் விதத்தை அதிகரிப்பதுமே எமது நோக்கமாகும் . இது ஒரு உலகளாவிய வேலைத் திட்டம் . இதில் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழரும் ஆத்ம ரீதியாக தன்னை இணைத்துக் கொள்ளும் படி நான் கேட்டுக்கொள்கிறேன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறிலங்கா புறக்கணிப்பு செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
புலம் பெயர் தமிழ் மக்களாகிய நாங்கள் மட்டும் அல்ல சர்வதேசத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது . சர்வதேச சம்மூகமும் இதில் இணைத்து கொள்ளும் போது தான் இது பெரும் வெற்றியை அளிக்கும் .
30 ஆண்டுகளாக நாம் நடத்திய விடுதலைப் போரை பயங்கரவாதமாக உலகுக்கு காட்டி , அந்த உலக நாடுகளின் இராணுவ இராஜதந்திர , பொருளாதார ஆதரவை சிறிலங்கா தனக்கு சாதமாக பெற்றுக் கொண்டது . ஆனால் இன்று போர் முடிவுற்று 4 ஆண்டுகள் ஆகியும் எமது மக்களின் அரசியல் வாழ்வியல் நிலையில் எதுவித மாற்றமும் இல்லை. மாறாக சர்வதேச வெளிநாட்டு வருவாய்களையும் போதிய அளவில் பெற்றுக் கொண்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவ மயமாக்கல் துரிதப் படுத்தப் படுகின்றது. சிங்கள குடியேற்றங்கள் தீவிரப் படுத்தப்படுகின்றன .
சிறிலங்காவிற்கு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் மூலமே இவற்றை தடுத்து நிறுத்த முடியும் அல்லது இத் தகைய செயல்களை நிலை குலைய முடியும். அடிப்படையில் இது ஒரு பொருளாதார போராகும் . தங்கள் மக்களுக்கு நல்லாட்சியை வழங்காத அரசாங்கங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் இத் தகைய நடவடிக்கைகளையையே தொடர்ந்து செய்து வருகின்றது. உலக சனநாயக பண்புகளை மதித்து சனநாயக நெறிகளை கடைப் பிடித்து நாம் முன் எடுக்கும் இந்த வேலைத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளகிறேன் .
இந்த வேலைத் திட்டம் கண்டங்களாக நாடுகளாகப் பிரிக்கப் பட்டு பொருளாதார வர்த்தக இழக்கும் நன்கு துல்லியமாக இனம் காணப் பட்டு அவற்றிற்கு ஏற்ற வகையில் எமது பிரச்சாரம் மேற்கொள்ளப் படும் .
இவற்றிற்கு என ஒரு நிர்வாக கட்டமைப்பு உருவாகப் பட்டுள்ளது . இதில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டு ஓர் ஒழுங்கு நெறிமுறையில் செயற் படவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன் . ஏனெனில் எமது இலட்சியத்தை நாம் அடையும் வரை ஓய் வின்றி செயற்படப் போகும் ஓர் நீண்ட கால வேலைத்திட்டமாகும் இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறிலங்கா புறக்கணிப்பு செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்
Social Buttons