Latest News

May 05, 2014

சிறிலங்காவுக்கு எதிரான பிரித்தானியாவின் அனைத்துலக மாநாடு.
by admin - 0

அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்காவில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்-பட்டிருந்தது.


மோதல் சூழலில் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதி, சாய்னாப் பங்குரா, சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கவலை வெளி-யிட்டிருந்ததுடன், மோதல் சூழலில் பாலியல் வன்-முறைகள் இடம்பெற்ற, இடம்பெறும் கவலைக்குரிய 21 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் இணைத்திருந்தார்.

இந்தநிலையில், லண்டன் எக்செல் நிலையத்தில் அடுத்த மாதம் 10ம் நாள் தொடக்கம் 13ம் நாள் வரை பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான அனைத்துலக மாநாட்டுக்கு ஐ.நாவின் அனு-சரணையுடன் பிரித்தானியா ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா முகவரமைப்பின் சிறப்புத் தூதுவர் ஏஞ்சலினா ஜொலி ஆகியோர் இந்த மாநாட்டுமுக்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

கடந்த நொவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா வந்திருந்த போதே, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக், பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில், அடுத்த மாதம் லண்டனில் நடக்கவுள்ள மாநாடு சிறிலங்காவுக்கு எதிரான களமாகவும் பயன்படுத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
« PREV
NEXT »