Latest News

May 25, 2014

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: ரஜினிகாந்த் வீடு முற்றுகை
by admin - 0

ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவுக்கு (நரேந்திர மோடி பதவியேற்பு விழா) நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து அவரது ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி, இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் விழா தலைநகர் டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இந்த விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகத்தினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், தமிழீழ மாணவர் கூட்டமைப்பு உள்பட ஏராளமான இயக்கங்கள் சார்பில் தொடர்ந்து கண்டன போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.
ராஜபக்சே கலந்துகொள்ளும் விழாவுக்கு (நரேந்திர மோடி பதவியேற்பு விழா) நடிகர் ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டினை முற்றுகையிடப்போவதாக பாலச்சந்தர் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து கோஷமிட்டபடியும், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் பொலிசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் கைது செய்தனர்.
« PREV
NEXT »