விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்ப்ப்படுவார்கள் என்றும், இது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Social Buttons