ஊடக சுதந்திரம் காணப்படும் நாடுகளை குறித்த அமைப்பு தர வரிசைப்படுத்தியுள்ளது. குறைந்த புள்ளிகளைப் பெறும் நாட்டில் அதிகளவு சுதந்திரம் காணப்படுவதாகவும் அதிக புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் நாட்டில் சுதந்திரம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 76 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஊடக சுதந்திரம் கிடையாது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் ஊடகங்கள் சுதந்திரமான முறையில் இயங்கவில்லை என ப்ரீடம் ஹவுஸ் என்ற சர்வதேச ஊடக சுதந்திரம் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக சுதந்திரம் அதிகமாக காணப்படும் நாடுகளின் வரிசையில் நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் எண்ணிக்கை பத்தாகும்.
2014ம் ஆண்டுக்கான ஊடக சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடகங்களுக்கு சுதந்திரம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஊடக சுதந்திரம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எகிப்து, லிபியா, ஜோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Social Buttons