Latest News

May 02, 2014

இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா மீண்டும் கவலை
by admin - 0

இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க தவறியமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால், அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இதனை கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த போதும், அந்நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் இன்னும் வலுவற்ற நிலையிலேயே இருக்கின்றது.
அத்துடன் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை ஏற்படுத்த தவறியுள்ளமை ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கா, இலங்கை மக்களுடன் நீடித்த சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றி வருகிறது எனவும் பிஸ்வால் கூறியுள்ளார்.
« PREV
NEXT »