Latest News

May 22, 2014

வடமாகாணசபையிலும் எரிந்தது தீபம்! தடைகளை தாண்டி நினைவேந்தல்!!
by admin - 0

போடப்பட்ட பல முட்டுக்கட்டைகளினை தாண்டி வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற வடமாகாணசபையின் ஒத்திகை கூட்டத்தினில் அரச கட்டடங்களினில் தீபமேற்ற முடியாதென முதலமைச்சர் மற்றும் பேரவை தலைவர் உள்ளிட்ட சிலர் வாதிட்டதுடன் தேவையாயின் கறுப்பு பட்டி அணிந்து அமர்வில் பங்கெடுக்க ஆலூசனைகளை முன்வைத்திருந்தனர்.எனினும் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் அனந்தி மற்றும் கஜதீபன் ஆகியோருடன் அமைச்சர் ஜங்கரநேசனும் தீபமேற்ற வேண்டியதை வலியுறுத்தியதுடன் மக்களது எதிர்பார்ப்பு அதுவென வலியுறுத்தினர்.எனினும் முதலமைச்சரது விட்டுக்கொடுப்பின்மை காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டு கறுப்பு பட்டியணிவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.



இந்நிiயினில் வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில்; ஆரம்பமாகிய வேளை சிவாஜிலிங்கம் தன்னால் எடுத்து வரப்பட்ட மெழுகுதிரிகளை தடாலாடியாக அனைவரிடமும் வழங்கி தீபமேற்றி மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.அதனையடுத்து அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஜங்கரநேசன உள்ளிட்ட உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.




இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிஸை சேர்ந்த ரயீஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அத்துடன்  எதிர்க்கட்சித்தலைவர்  தவராசா பங்கெடுப்பதா இல்லையாவென்பது பற்றி முடிவெடுக்க முடியாது வெளியே வந்திருந்தார். எனினும் அவைத்தலைவர் சீ.வி,கே.சிவஞானமோ முதலமைச்சரோ அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.




பின்னர் சபை அமர்வினில் கலந்து கொண்டுய உரையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,விந்தன் கனகரத்தினம், லிங்கநாதன்,பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் , அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

« PREV
NEXT »