Latest News

May 10, 2014

முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய ஆயுதக்கிடங்கு! பீதியடைந்த இராணுவம்
by admin - 0

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், மிகப்பெரியளவிலான ஆயுதக் கிடங்கு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் இறுதிப் போர் நடந்த வெள்ளமுள்ளிவாய்க்கால் என்ற இடத்தில், கடற்கரையோரமாக இந்த ஆயுதக்கிடங்கு நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆயுதக்கிடங்கில் இருந்து 56 ஆயிரம் மக்னம் பிஸ்டல் துப்பாக்கி ரவைகள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் 9 மி.மீ ரவைகள், மற்றும் 12 போர் வேட்டைத்துப்பாக்கிகளுக்கான ரவைகள் 2750 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கூடப் பயன்படுத்தக் கூடிய வகையில், இந்த ரவைகள், கிறீஸ் பூசப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மீனவர்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, கிழக்கு கடற்படைத் தலைமையகம் இவற்றை மீட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தனி ஆயுதக்கிடங்கு இதுவென்றும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.



« PREV
NEXT »